×

இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் சாதனை

செங்கல்பட்டு, ஏப்.9: செங்கல்பட்டு அடுத்த திருமுக்கூடல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (38). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இடுப்பு பகுதியில் அடிபட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு மிகவும் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை பிரிவில் ேசர்க்கப்பட்டார். அவருக்கு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்கள் மனோகரன், கலையரசன், எழில்மாறன், ராஜ்குமார், மாலா, ரமணிகாந்த் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர்  தீவிர பரிசோதனை செய்ததில், எலும்பில் பந்து கிண்ண மூட்டு இருக்கும் குழிவிலகியிருந்தது.

மேலும் கப்பு தளர்வாகி உடைந்திருந்தது தெரிந்தது. இந்நிலையில் அவருக்கு உடனடியாக இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பின்னர் அவர் பூரண குணமடைந்தார்.இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன் உஷா சதாசிவன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மிகவும் ஆபத்தான, நுட்பமான இந்த அறுவை சிகிச்சையை செங்கல்பட்டு மருத்துவமனையில் முதல் முறையாக செய்து டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர்.தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சை செய்திருந்தால், ₹4 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை செலவாகியிருக்கும். ஆனால் முதலமைச்சர் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்த அறுவை சிச்சை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.இதுகுறித்து சிகிச்சையில் குணமடைந்த லட்சுமி கூறுகையில், கடந்த 10 வருடங்களாக இடுப்பு பகுதியில் அடிபட்டு நடக்க முடியாமல் அவதிபட்டு வந்தேன்.எனது இந்த பிரச்னை 1 வாரத்தில் டாக்டர்கள் சரிசெய்தனர். இதில் நான் பூரண குணமடைந்துள்ளேன். மேலும் இதனால் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்பலாம் என டாக்டர்கள் கூறினர். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி என கூறினார்.


Tags : Government ,Doctors ,Chenkalpattu ,
× RELATED நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில்...